புகழ்பெற்ற பத்திரிகையின் அட்டை படத்தில் இடம்பெற்ற நடிகை - உலக அளவில் அங்கீகாரத்தால் மகிழ்ச்சி!
உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கையான குளோபல் ஸ்பாவில் நடிகை தமன்னாவின் புகைப்படம் அட்டை படத்தில் இடம்பெற்றுள்ளது.
By : Karthiga
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து பல வெற்றி படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். தனது அழகாலும் நடன திறமையாலும் பளீச்சென்ற தோற்றத்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை தமன்னா.
சமீபத்தில் இவர் 'ஜெயிலர்' திரைப்படத்தில் ஆடிய 'காலாலா' நடனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. காவலா பாட்டிற்கு தமன்னாவின் நடனத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. சமூக வலைதளங்கள் ரீல்ஸ் செய்யும் அனைவரும் காவலா பாட்டிற்கு நடனமாடி இவரை போலவே நடனத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற பத்திரிக்கையான 'குளோபல் ஸ்பா' வின் அட்டைப் பக்கத்தில் தமன்னாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது . தமன்னாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இப்படி ஒரு அங்கீகாரம் தனக்கு கிடைத்ததில் தமன்னா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
SOURCE :Daily thanthi