பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத அனிதா - ஆறுதல் கூறிய போட்டியாளர்கள்!
பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத அனிதா - ஆறுதல் கூறிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக சுரேஷை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர். அந்த வகையில் இன்று அனிதா உள்ளே வருவது போல ப்ரோமோ இருந்தது.அனிதா சமீபத்தில் அவரது தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் நிலையில் அவர் சோகமாக உள்ளே வந்ததும், அவரது தந்தையின் மறைவு குறித்து ஏற்கனவே அறிந்திருந்த ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
குறிப்பாக வேல்முருகன் நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம் என்று ஆறுதல் கூறுகிறார். அதேபோல் மற்ற போட்டியாளர்களும் அப்பாவை நினைத்து கவலைப்பட வேண்டாம், மனதை தைரியப்படுத்தி கொள் என்று அனிதாவுக்கு ஆறுதல் கூறும் உருக்கமான காட்சிகள் இந்த ப்ரோமோவில் உள்ளன. பின்னர் அனிதா அப்பா குறித்து பேசியது அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் கைதட்டி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இன்றைய அனிதாவின் வருகை ஹவுஸ்மேட்ஸ்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும், அனிதாவுக்கும் இது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய புரமோவில் ஒரு காட்சியில் கூட ஆரி மற்றும் பாலாஜி இல்லாதது ஏன் என்று புரியவில்லை. இதனையடுத்து ஆரி ஆர்மியினர் என் தலைவன் ஆரி எங்கடா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day101 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6PGKCVeFcI
— Vijay Television (@vijaytelevision) January 13, 2021