ரஜினியின் கொரோனா ரிசல்ட்! அண்ணாத்த படம் திடீர் நிறுத்தம்!
ரஜினியின் கொரோனா ரிசல்ட்! அண்ணாத்த படம் திடீர் நிறுத்தம்!
By : Amritha J
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் "அண்ணாத்த".படத்தின் படப்பிடிப்பு 8 மாதங்களுக்கு முன்னர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 'அண்ணாத்த' படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் வெளியேறியதாகவும் செய்திகள் வெளியானது.
இது குறித்து விளக்கமளித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது வழக்கமாக செய்த பரிசோதனையின் போது நான்கு பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேர்களை தவிர சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது. இருப்பினும் படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டு படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற தகவல் தற்போது அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என அண்ணாத்த படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.