Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!
X

Amritha JBy : Amritha J

  |  26 Dec 2020 11:53 PM IST

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அந்தவகையில் இவர் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைவிட இன்று நல்லபடியாக இருக்கிறார் என்றும் அவருடைய அவருடைய ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும் நேற்றை விட குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக அவரது ரத்த அழுத்தம் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ரஜினிகாந்த் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தபட்டுள்ளதால் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவருடைய ரத்த அழுத்தத்தின் அளவை பொருத்து அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று இன்று மாலை மருத்துவர்களால் முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.

ரஜினிகாந்தின் உடல்நிலை நேற்றைவிட இன்று நன்றாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை மூலம் அறிந்ததும் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News