Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் ஏ.ஆர்.முருகதாஸ்

2020ல் தமிழில் ரஜினியை வைத்து இயக்குனர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய படம் தர்பார்.

சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் ஏ.ஆர்.முருகதாஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:16 PM GMT

2020ல் தமிழில் ரஜினியை வைத்து இயக்குனர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய படம் தர்பார். இப்படம் பெரும் வரவேற்பு பெறவில்லை. அதற்கு அடுத்ததாக விஜயை வைத்து இயக்குனர் முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்தது ஆனால் விஜய் அதை மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு சில நடிகர்களுடன் அவர் இணைவதாக மட்டுமே செய்திகள் வெளி வந்தது.

இயக்குனர் முருகதாஸ் படம் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளாராம். இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வந்த போதிலும் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

இப்போது அயலான் படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்து மாவீரன் படத்தில் நடிக்கிறார், அதற்குப் பிறகு கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கு பின் சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணையுள்ள அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News