வெற்றி பெற்ற பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் பாணியில் ட்விட் செய்த ஆரி!
வெற்றி பெற்ற பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் பாணியில் ட்விட் செய்த ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வெற்றி பெற்ற ஆரி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பாணியில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன்-4 கடந்த 105 நாட்கள் நடத்தப்பட்டன. நேற்றய இறுதி சுற்றில் 11 கோடி வாக்குகள் பெற்று மக்களின் மனதை வென்று வெற்றி பெற்றார் ஆரி.

மேலும் டைட்டில் வென்ற ஆரிக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெற்றிக் கோப்பையுடன் வீட்டிற்கு வந்த ஆரி, முதன்முதலாக அவரது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் "எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டிற்கு லைக்ஸ்கள், ரீடுவிட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் பரிசை வென்ற பின்னர் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று ஆஸ்கார் மேடையிலேயே கூறிய பாணியில் ஆரியின் டுவிட் இருப்பதாக பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே....#Aari #AariArujunan #BiggBossTamil4@narayan_aadhi @shortfundly_ind pic.twitter.com/NWvyL9kIOv
— Aari Arjunan (@Aariarujunan) January 17, 2021