Kathir News
Begin typing your search above and press return to search.

டாஸ்க்கில் மோதிக்கொள்ளும் அர்ச்சனா மற்றும் சோம் - அன்பு குரூப் உடையுமா.?

டாஸ்க்கில் மோதிக்கொள்ளும் அர்ச்சனா மற்றும் சோம் - அன்பு குரூப் உடையுமா.?

டாஸ்க்கில் மோதிக்கொள்ளும் அர்ச்சனா மற்றும் சோம் - அன்பு குரூப் உடையுமா.?
X

Amritha JBy : Amritha J

  |  16 Dec 2020 3:45 PM GMT

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு டாஸ்கின் போதும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும், சண்டைகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த வாரம் நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சண்டை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் லக்சரி பட்ஜெட் கோழிப்பண்ணை டாஸ்க்கில் அன்பு குரூப் சுக்குநூறாக உடைந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடிகிறது.

நேற்றும் ரியோ மற்றும் அர்ச்சனா கடுமையாக வாதம் செய்த நிலையில் இன்றும் அர்ச்சனா மற்றும் சோம் வாக்குவாதம் செய்கிறார்கள்.இன்று அர்ச்சனாவின் முட்டையை தொட முயன்று ரியோ தோற்று விட்ட நிலையில் சோம் தொட்டு விடுகிறார்.

ஆனாலும் தனது முட்டையை சோம் உடைத்து விட்டதாக அர்ச்சனா குற்றம்சாட்ட நான் உடைக்கவில்லை நீதான் உடைத்தாய் என்று சோம் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து சோம் அர்ச்சனாவின் மூட்டையைக் கீழே போட்டு மீண்டும் உடைக்கிறார்.

இதற்கு ஆவேசமாக அர்ச்சனா சோம்சேகரிடம் சண்டை செய்யும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.ஆனால் டாஸ்க்கின்போது ஆவேசமாக அன்பு குரூப்பினர் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டாலும் அதன் பின்னர் சமாதானமாக அடுத்தவர்களை பற்றி பேச ஆரம்பித்தனர். அதேபோல் இன்றைய டாஸ்கிலும் அடித்துக்கொள்ளும் சோம் மற்றும் அர்ச்சனா ஒன்று சேருவார்களா என்று பார்ப்போம்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News