பாலாஜி செய்த டார்ச்சரால் கண்ணீர் மழையில் நனைந்த அர்ச்சனா.!
பாலாஜி செய்த டார்ச்சரால் கண்ணீர் மழையில் நனைந்த அர்ச்சனா.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் அனைவருக்கும் "புதிய மனிதா" என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.அதில் இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிந்து கொள்கின்றனர். பாலாஜி தலைமையிலான மனிதர்கள் அணிக்கும், அர்ச்சனா தலைமையிலான ரோபோ அணிக்கும் இடையில் தான் போட்டி.ரோபோக்களிடம் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் ஆகிய ஏதாவது உணர்வுகளை மனிதர்கள் டீம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் பாலாஜி, ரியோ, அனிதா, ஆரி, ஆஜித், நிஷா ஆகியோர் மனிதர்கள் டீமாகவும், அர்ச்சனா, சோம், ரமேஷ், கேபி, ஷிவானி, ரம்யா ஆகியோர் ரோபோ டீம்களாகவும் உள்ளனர்.
ரோபோக்களுக்கு மனித உணர்வுகளை வரவழைக்க கருப்பு ஆடு, ராஜா வீட்டு கன்னுக்குட்டி என கூறி உசுப்பேற்றியும் ரோபோக்கள் அசையவில்லை. இந்த நிலையில் பாலாஜி அணியினர் கொடுத்த டார்ச்சர் காரணமாக அர்ச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டதால் அந்த அணி தோல்வி அடைந்தது போல் தெரிகிறது.
ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இல்லாத அர்ச்சனா இதற்கு என்ன விளக்கமளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இது டாஸ்க் என்று பார்க்காமல் இனிவரும் காலங்களில் அர்ச்சனாக்கும் பாலாஜிக்கான போரின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிற்து. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இன்று நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.