ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அர்ச்சனா..!
ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அர்ச்சனா..!

By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வகையில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். டாஸ்குகள் உள்பட அனைத்திலும் ஈடுபாட்டுடன் அவர் இருந்தாலும் அவர் பைனல் வரை செல்லாததற்கு முக்கிய காரணம் அன்பு குரூப் ஆரம்பித்ததே என்றும் அன்பு என்ற ஸ்டாட்டர்ஜியை வைத்து அவர் மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்ததாகவும், ஒருசில போட்டியாளர்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தார் என்பதும் பலரது குற்றச்சாட்டாக உள்ளது
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்த அர்ச்சனா அதில் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவ்வாறு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது 'ஐயோ வேண்டாம் சாமி' நான் இப்போது எனது வீடு என்ற சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார். இந்த பதிலுக்கு ரசிகரின் கேள்வி என்னவெனில் நீங்கள் எப்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக செல்வீர்கள் என்பது தான்.மேலும் இன்னொரு ரசிகர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று கூறியபோது நன்றி நானும் அதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜீ டிவியிலேயே அர்ச்சனா இருந்திருக்கலாம் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த அர்ச்சனா எப்போதும் நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கியது இல்லை என்றும் நான் இப்போதும் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
