பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
By : Kathir Webdesk
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று பின்பு எலிமினேட் செய்யப்பட்ட அர்ச்சனா ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ச்சனா முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்டத்திட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் உள்ளார். திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதனையடுத்து அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்கு சென்றார். கிட்டத்தட்ட 69 நாட்கள் கடந்த பின்பு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ஹேட்டர்ஸ்கள் உருவாகி இருந்ததால், தான் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
அதில் உங்களின் அன்பு -வெறுப்பு மழையில் நான் சோர்வடைந்துவிட்டேன். நான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதை கொண்டாடுபவர்களே, நான் மீண்டும் வருவேன். ‘குட் பை ட்விட்டர்’ என்ற கூறி விஜய் தொலைக்காட்சியை டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனா எடுத்த இந்த முடிவால் அவரது ட்விட்டர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.