ஆரி ரசிகர்கள்: அனிதா, ரம்யாவை அடுத்து ரியோவும் டார்கெட் செய்யப்படுவாரா?
ஆரி ரசிகர்கள்: அனிதா, ரம்யாவை அடுத்து ரியோவும் டார்கெட் செய்யப்படுவாரா?
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் நேற்று ஆஜித் வெளியேற்றப்பட்டார். அந்த வகையில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றுவரை ஆரியை எதிர்த்து பேசியவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்சனின்போது ரம்யாவை இறுதி கட்டம் வரை கொண்டு சென்று அவர் கண்ணில் பயத்தை காட்டியது ஆரியின் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலாவுக்கும் பயத்தை ஆரி, தற்போது ரியோவுக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டதாக தெரிகிறது.மேலும் இன்றைய 2-வது புரோமோ விடியோவில் ஆரி குறித்து ரியோ கூறியபோது, ஆரி ஒரு பயத்தை கொடுக்கின்றார். பயமுறுத்துகிறார்.
நீங்கள் என்னை இப்படி சொல்லி விட்டீர்கள் என்றால் மக்கள் இதற்கு என்ன கேட்பார்கள் தெரியுமா என்று அவர் கூறுகிறார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்கள் வரவில்லை என்று நான் மிகவும் எளிமையாக கூறியதை வைத்து பயமுறுத்துகிறார்.ஆனால் அதற்கு நான் 100 சதவீதம் உழைத்திருக்கிறேன், உழைப்பை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார்.
ஆரியின் குழந்தையின் மேல் நான் ஆசையாக விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு மாதிரி வெறுப்பை உருவாக்குகிறார். இவர் பேசிய சில வார்த்தைகளால் எனக்கு அதிகமாக கோபம் தான் வருகிறது என்று ரியோ கேபியிடம் கூறியுள்ளார். இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
#Day92 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/382eFFscVD
— Vijay Television (@vijaytelevision) January 4, 2021