Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களை சந்திக்கும் ஆரி.! எங்கே தெரியுமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களை சந்திக்கும் ஆரி.! எங்கே தெரியுமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களை சந்திக்கும் ஆரி.! எங்கே தெரியுமா..?
X

Amritha JBy : Amritha J

  |  20 Feb 2021 12:15 AM IST

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆன ஆரிக்கு மக்களின் வாழ்த்துக்களும்,திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஆரி கலந்து கொண்டதை அடுத்து தற்போது அவர் முதன்முதலாக தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்த தகவலை அவரது சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.


மேலும் இந்த தகவலில் மக்களுக்கு முதல் வணக்கம் என்ற நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் கலந்துகொள்ளவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முதலாக மக்களை ஆரி நேரில் சந்திக்கும் இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 21-ஆம் தேதி ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மால் ஒன்றில் நடைபெற உள்ளது எனவும் மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈரோடு மகேஷ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News