அபாய கட்டத்தை தாண்டிய நடிகர் அருண் பாண்டியன்.!
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் அலையை விட தற்போது இரண்டாம் அலையில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் அலையை விட தற்போது இரண்டாம் அலையில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் அருண்பாண்டியனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து திருநெல்வேலியில் இருக்கும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று என்பதாலும் அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதால் கவனமுடன் ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சிகிச்சைக்கு பின்னர் அருண்பாண்டியன் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி உள்ளார். மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.