அருண் விஜய்'யின் 'பார்டர்' படம் வெளியிட தடை கோரி வழக்கு !
Cinema News.
By : Mohan Raj
அருண் விஜய்'யின் 'பார்டர்' படத்தை வெளியிட தடை கோரி சார்லஸ் ஆண்டனி சாம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்டர்'. இப்படம் முழுவதும் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் சார்லஸ் ஆண்டனி சாம் என்பவர் 'பார்டர்' என்ற தலைப்பில் தான் படம் ஒன்றை தயாரித்து வருவதாகவும், இந்த படத்தின் தலைப்பை ஏற்கனவே தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பார்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார். இந்த வழக்கு முடிவுக்கு வந்தால்தான் 'பார்டர்' படம் திரைக்கு வரும்.