Kathir News
Begin typing your search above and press return to search.

அருண் விஜயின் 'சினம்' டீசர் வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

அருண் விஜயின் 'சினம்' டீசர் வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

அருண் விஜயின் சினம் டீசர் வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
X

Amritha JBy : Amritha J

  |  11 Jan 2021 10:14 PM IST

தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண்விஜய். இந்நிலையில் ஜி.என்.குமரவேலன் இயக்கிய 'சினம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று 10.30 மணி அளவில் 'சினம்' படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் தப்பை கண்டு ஒவ்வொருத்தருக்கும் கோபம் வர வேண்டும் அவ்வாறு கோபம் வந்தால் தான் தப்பு செய்றவன் பயப்படுவான், பயப்படனும் என்ற வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த டீசரை பார்க்கும் போதே இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் வில்லன்களால் பாதிக்கப்பட்ட நாயகன் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம் என்றும் தெரியவருகிறது. அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.

கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.மேலும் அருண்விஜய் ஏற்கனவே நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் மற்றும் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜய் 31 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News