Kathir News
Begin typing your search above and press return to search.

'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் இணையும் ஆர்யா

நடிகர் ஆர்யா அடுத்தபடியாக கொம்பன் முத்தையா இயக்கத்தில் கிராமப் பின்னணி கதையில் நடிக்கவிருக்கிறார்.

கொம்பன் முத்தையா இயக்கத்தில் இணையும் ஆர்யா

Mohan RajBy : Mohan Raj

  |  1 May 2022 8:15 AM GMT

நடிகர் ஆர்யா அடுத்தபடியாக கொம்பன் முத்தையா இயக்கத்தில் கிராமப் பின்னணி கதையில் நடிக்கவிருக்கிறார்.





தற்பொழுது கொம்பன் முத்தையா கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அடுத்தபடியாக ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு கிராமிய பின்னணி கொண்ட கதையை இயக்க விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருக்கும் இந்த படத்தின் கதையம்சம் வழக்கமான முத்தையா பட பாணியில் இருக்கும் என்று தெரிகிறது. படத்தில் முழு நேர கிராமிய கதாநாயகனாக ஆர்யா நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News