பெண்ணிடம் ஆசைகாட்டி மோசடி - நடிகர் ஆர்யா நேரில் ஆஜர்
ஆர்யா'வின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெர்மனியில் வசிக்கும் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் அனுப்பியதன் பெயரில் நடிகர் ஆர்யா'வின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தன்னிடம் 70 லட்சம் பணம் வேறு வாங்கிகொண்டு தர மறுக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் பெயரில் நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.