ஆர்யா நடித்த டெடி திரைப்படத்தின் த்ரில் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லர் வெளியீடு!
ஆர்யா நடித்த டெடி திரைப்படத்தின் த்ரில் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லர் வெளியீடு!
By : Amritha J
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா தற்போது 'டெடி' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் புஷ்பா, எனிமி மற்றும் சல்பேட்டா ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது.டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா நடித்த திரைப்படம் 'டெடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து OTT-யில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.டெடி படத்தின் டிரைலர் த்ரில் காட்சிகள் நிறைந்ததாகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.