Kathir News
Begin typing your search above and press return to search.

என்னதான் வசூலை குவித்தாலும் முதல் பாகத்தை முந்த முடியாத அவதார் 2

உலகம் முழுவதும் டிசம்பர் 16ம் தேதியில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் - த வே ஆப் வாட்டர் ஹாலிவுட் படம் பெரும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

என்னதான் வசூலை குவித்தாலும் முதல் பாகத்தை முந்த முடியாத அவதார் 2

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2023 11:10 AM GMT

உலகம் முழுவதும் டிசம்பர் 16ம் தேதியில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் - த வே ஆப் வாட்டர் ஹாலிவுட் படம் பெரும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் உலக அளவில் 1.38 பில்லியன் வசூலித்துள்ளது, இது ஒரு பில்லியன் யுஎஸ் டாலரை கடந்தாலும் அவதார் படத்தின் முதல் பாகத்தின் வசூலை விட குறைவுதான்.




இரண்டு வாரங்களில் உலக அளவில் 958 மில்லியன் யுஎஸ் டாலர், அமெரிக்காவில் 422 மில்லியன் யுஎஸ் டாலர் என மொத்தமாக 1.38 யுஎஸ் டாலர், இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 400 கோடி வரை வசூலாகியுள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




அவதார் படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து உலக அளவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் அவதார் 2 படம் தற்போது 14வது இடதிதில் உள்ளது. அவதார் படத்தின் முதல் பாகம் வசூலித்த வசூலை 2ம் பாகம் முறியடிக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News