Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார் 2 படத்தின் வெளியீடு தொடர்பான சிக்கல் - என்ன நடந்தது?

கேரளாவில் அவதார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளன.

கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார் 2 படத்தின் வெளியீடு தொடர்பான சிக்கல் - என்ன நடந்தது?

Mohan RajBy : Mohan Raj

  |  5 Dec 2022 2:22 PM GMT

கேரளாவில் அவதார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளன.




12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற திரைப்படம் 'அவதார்', இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் வரும் டிசம்பர் 16ஆம் தேதி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.




வழக்கமாக தரும் பங்கு சதவீதத்தை விட 5% கூடுதலாக தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்ட காரணத்தினால் இந்த பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தை காரணமாக சுமூகமாக தேர்வு எட்டப்பட்டதாகவும் இதனால் படம் வெளியாவதில் சிக்கல் எதுவும் இருக்காது எனவும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News