Kathir News
Begin typing your search above and press return to search.

ஐந்து வருட இழுபறிக்குப்பின் அயலான் படம் தீபாவளிக்கு ரிலீஸ் - மகிழ்ச்சியில் சிகா

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படப்பிடிப்பு 2018ல் தொடங்கி பல்வேறு காரணங்களால் இழுபறி ஆகி ரிலீஸ் தேதி தள்ளி சென்று கொண்டே இருந்தது தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐந்து வருட இழுபறிக்குப்பின் அயலான் படம் தீபாவளிக்கு ரிலீஸ் - மகிழ்ச்சியில் சிகா

KarthigaBy : Karthiga

  |  27 April 2023 4:30 AM GMT

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படைப்பிடிப்பு 2018ல் தொடங்கி கொரோனா, பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமானது. படப்பிடிப்பை முடித்த பிறகும் திரைக்கு வராமல் சில வருடங்களாக முடங்கியிருந்தது. இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் திரைக்கு வந்து விட்டன. ஆனால் அயலான் வெளியாகுவதில் தொடர்ந்து இழுபறி நிலவியது .


இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அயலான் படம் திரைக்கு வரும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் .இது குறித்து பட குழுவினர் தரப்பில் கூறுவது "பல தடைகளை தண்டி கடின உழைப்பை கொடுத்து உருவாக்கி உள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் முயற்சியுடன் பணிபுரிந்துள்ளோம். அதை முடிக்க காலம் தேவைப்பட்டது. இந்திய சினிமாவில் முதல் லைவ் ஆக்ஷன் திரைப்படமாகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாகவும் அயலான் இருக்கும். தமிழ், தெலுங்கு ,இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகயுள்ளது என்றனர். வேற்று கிரக வாசி கதையாக உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ .ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News