Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழில் ஐயப்பனும் கோஷியும் - உரிமை வாங்கிய தயாரிப்பாளருக்கு புது சிக்கல்

மலையாளத்தில் வெளியான 'ஐயப்பனும் கோஷியும்' படத்தை தமிழில் மறு பதிப்பு செய்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் ஐயப்பனும் கோஷியும் - உரிமை வாங்கிய தயாரிப்பாளருக்கு புது சிக்கல்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Sep 2022 6:32 AM GMT

மலையாளத்தில் வெளியான 'ஐயப்பனும் கோஷியும்' படத்தை தமிழில் மறு பதிப்பு செய்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.




மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'ஐயப்பனும் கோஷியும்'. மிகப்பெரும் வெற்றடைந்த இப்படம் தற்பொழுது தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது இப்படம் ஹிந்தியிலும் மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது.




இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை இயக்கி வருவதால் தமிழ் ஐயப்பனும் கோஷியும் படத்தை மறுபதிப்பு செய்வதில் கவனம் செலுத்தாமல் தள்ளி வைத்துள்ளார். மேலும் "ஐயப்பனும் கோஷியும்' திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழில் பெரும்பாலான ரசிகர்கள் பார்த்துவிடுவதால் மீண்டும் படத்தை மறுபதிப்பு செய்வதால் ரசிகர்கள் விரும்புவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News