Kathir News
Begin typing your search above and press return to search.

புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறார் 'பாபா' - ரசிகர்கள் ஆர்வம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 150 வது திரைப்படமான பாபா மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாக இருக்கிறது.

புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறார் பாபா - ரசிகர்கள் ஆர்வம்

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2022 2:33 AM GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 150 வது திரைப்படமான பாபா மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாக இருக்கிறது.




கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களையும் பெற்றது. மகா அவதார் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை எனவும் அதே ரீதியில் ரஜினிகாந்த் தன்னுடைய ஆன்மீக திருப்திக்காக நடித்த படம் என்பதால் ரஜினி ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.




இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படம் தற்பொழுது நவீன தொலைநுட்பத்துக்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு ஃபிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் மறு ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News