Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத்தில் பதான் பட விளம்பர நிகழ்ச்சியை அடித்து நொறுக்கிய பஜ்ரங்தள் தொண்டர்கள்

ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பதான் வெளியாகிறது.

குஜராத்தில் பதான் பட விளம்பர நிகழ்ச்சியை அடித்து நொறுக்கிய பஜ்ரங்தள் தொண்டர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2023 2:22 PM GMT

ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பதான் வெளியாகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் தீபிகா படுகோன் ஆபாசமாக காவி உடை அணிந்து ஆடியது எதிர்ப்புகள் பலமாக கிளம்பியது.




இந்தநிலையில் படம் வெளியாக உள்ளது. தணிக்கை குழுவும் இப்படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடுமாறு கூறியிருக்கிறது. ஆனாலும் இப்படத்தின் வெளியீட்டிற்கு வடமாநிலங்களில் கடுமை எதிராக போராட்டங்கள் அதிகரித்துள்ளது.




இந்தநிலையில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி குஜராத்தின் அகமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் நடந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த போனர்களை கிழித்து மற்றும் விளம்பர அச்சுக்கலை உடைத்து எரித்தனர். இந்த சம்பவத்தால் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் காத்ரி குஜராத்தில் இந்தப்படத்தை திரையிடும் தியேட்டர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News