கமல்ஹாசன் கூறிய வார்த்தையால் கதறி அழுத பாலாஜி!
கமல்ஹாசன் கூறிய வார்த்தையால் கதறி அழுத பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 98 நாட்கள் நடக்கும் நிலையில் நேற்று இறுதிப்போட்டிக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மூலம் சோம்சேகரும், மக்களால் காப்பாற்றப்பட்டதன் மூலம் ஆரியும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இன்று வந்த ப்ரோமோவில் ஆரிக்கு பின்னர் அதிக வாக்குகள் பெற்று மக்களால் காப்பாற்றப்பட்டு இறுதிப் போட்டிக்குச் செல்லும் இன்னொரு போட்டியாளரை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.
இடைவெளிக்குப்பின் அறிவிக்கலாம் என்பது பழைய தந்திரம் என்றும் அதனால் நேரடியாக அதனை சொல்லிவிடுகிறேன் என்று கூறிய கமல், பாலாஜி கூறலாமா என்று கேட்க உடனே பாலாஜி தன்னைத்தான் கமல் கூறுகிறார் என்று ஆச்சரியத்துடன் பார்க்க, ஆம், நீங்கள் தான் காப்பாற்றப்பட்டீர்கள் என்று கமல் கூறினார். உடனடியாக பாலாஜி உணர்ச்சிவசப்பட்டு எழுந்து தரையில் ஓங்கி கையை அடித்து ஆனந்தகண்ணீருடன் கதறியழுதவாறே அவர் நன்றி தெரிவித்தார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பாலாஜிக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து தற்போது சோம், ஆரி மற்றும் பாலாஜி ஆகிய மூவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று யார் வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day98 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Lth9ny9XTI
— Vijay Television (@vijaytelevision) January 10, 2021