அர்ச்சனா - கேப்ரில்லா கோபத்தை வெளிப்படுத்திய பாலாஜி.!
அர்ச்சனா - கேப்ரில்லா கோபத்தை வெளிப்படுத்திய பாலாஜி.!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய நிலையில் ஏழு நபர்கள் எலிமினேஷனுக்கு தேர்வாகி இருந்த நிலையில், பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க்கின் மூலம் அனிதா வெற்றிபெற சம்யுக்தா அவருக்கு பதிலாக நாமினேட் செய்யப்பட்டார்.
அதனிடையே தற்போது வந்த இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனா மற்றும் கேப்ரியலா பாலா ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் நடப்பதுபோல ப்ரோமோ இருந்தது.
இந்த நிலையில் நேற்று வரை நீ என் மகன் என தாய்ப்பாசத்தை பாலாஜி மீது பொழிந்து வந்த அர்ச்சனா நேற்று தன்னை பாலாஜி நாமினேட் செய்ததும் அவருடைய முகமே முழுக்க முழுக்க மாறிவிட்டது.திடீரென மறைந்து பாலாஜியை எதிரி போல் பார்க்க தொடங்கிவிட்டார்
பாசத்தை மையமாக வைத்து அனைத்து போட்டியாளர்களையும் மையமாக வைத்து விளையாடி வருபவர் அர்ச்சனா என டார்கெட் செய்ய ஆரம்பித்த பாலாஜி இன்றைய முதல் புரமோவில் அவருடைய ஆதரவாளர்கள் யார் யார் என்பதை ஒப்பனாகவே சொல்லிவிட்டார். இரண்டாவது ப்ரோமொவில் கேப்ரியலா பாலாஜியிடம் வாதாடுவது போலவும், அதற்கு பாலாஜி
எல்லாரும் என்மேல பழிபோட்டு என் பெயரை காலி பண்ணனும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க என்று கோபமாக பேசுகிறார். இந்த வாக்குவாதத்தில் திடீரென அர்ச்சனா நுழைய, அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் கடுமையாக வாக்குவாதம் நடக்கின்றது.
ஒரு கட்டத்தில் அர்ச்சனா அக்கா என பாலாஜி சொல்ல, என்னை அர்ச்சனா அக்கா என்று சொல்லாதே, அர்ச்சனா என்று சொன்னால் போதும் என கையை நீட்டி அர்ச்சனா கோபமாக கூறுகிறார்.
அதற்கு பாலாஜியும் அவருடைய நக்கலான சிரிப்போடு அர்ச்சனா என்று கூறுவதுபோல ப்ரோமோ முடிந்தது. இது சமூக வலைத்தளங்கள் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்கள் அர்ச்சனாவின் முகம் இதுதானா என்றும் இன்னும் வரும் நாட்களில் காரசாரமாக இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.