'காதலினால் சமநிலை' காதலர் தின கமல்ஹாசனின் பதிவு!
'காதலினால் சமநிலை' காதலர் தின கமல்ஹாசனின் பதிவு!

உலகநாயகன் கமலஹாசன் காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.அந்தவகையில் கொரோனா வைரஸை தாண்டியும் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் பாலிவுட் நடிகர்கள் என பலரும் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காதலர் தினம் குறித்த வாழ்த்துக்கள் அடங்கிய ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 80-களில் காதல் மன்னன் என்ற பட்டத்தை பெற்ற உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் டுவிட்டரில் காதலர் தின மெசேஜ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளது:காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2021