Kathir News
Begin typing your search above and press return to search.

#Beast குவைத் நாட்டில் 'பீஸ்ட்' படத்திற்கு தடை ஏன்?

#Beast குவைத் நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை ஏன்?

Mohan RajBy : Mohan Raj

  |  5 April 2022 1:00 PM GMT

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் நெல்சன்திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ஏப்ரல் 13'ம் தேதியன்று வெளிவரவிருக்கும் 'பீஸ்ட்' படம் சமீபத்தில் வெளியான இந்த 'பீஸ்ட்' ட்ரெய்லர் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக பார்வையாளர்களை குறுகிய காலத்தில் பெற்றது.


இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாலும் பெரிய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் குவைத் நாட்டில் 'பீஸ்ட்' படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த 'குரூப்', விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படங்கள் இதேபோல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News