'பீஸ்ட்' வெற்றி - படக்குழுவினருடன் கொண்டாடிய விஜய்
Beast Success party

By : Mohan Raj
'பீஸ்ட்' படம் வெற்றி அடைந்ததற்கு படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து அளித்துள்ளார்.
கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் 'பீஸ்ட்', சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்தளித்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் நெல்சன் பகிர்ந்துள்ளதாவது, 'விஜய் சார் எங்களுக்கு விருந்து வைத்ததற்கு நன்றி, மொத்த குழுவுடன் ஒரு மகிழ்ச்சியான நினைவில் வைக்க வேண்டிய மாலை பொழுதாக அது இருந்தது எங்களுக்கு இருந்தது! ஆதரவையும் அன்பையும் அளித்த விஜய்க்கு நன்றி உங்களுடன் பணியாற்றுவது வசீகரமானது' என கூறியுள்ளார்.
