பிக்பாஸ்: எவிக்சனில் நடந்த திடீர் திருப்பம் - வெளியேறியது யார்.?
பிக்பாஸ்: எவிக்சனில் நடந்த திடீர் திருப்பம் - வெளியேறியது யார்.?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் இன்று வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பதை அறிவிக்கும் புரமோ வெளியாகியுள்ள நிலையில் எவிக்சன் கார்டை கையில் கமல் அதை அறிவிக்கும் முன்னரே, அனிதா சம்பத் என்று அனிதாவே கூறிக் கொள்கிறார். அப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கமல் அனிதாவிடம் கேட்க அதற்கு அனிதா, எனக்கு புத்தாண்டு நிகழ்வை வீட்டில் கொண்டாட வேண்டும் போல் இருக்கின்றது. அதனால் நான் வீட்டுக்கு போகனும் என்று சொல்ல அப்போது கமல் செல்லமாக இதெல்லாம் கேட்டு வாங்குற விஷயமா என்று கூறினார்.

அதன் பின் ஆஜித்திடம் நான் உங்ககிட்ட சொல்லிட்டு இருந்தேன், ஞாபகம் இருக்கா இன்னும் உங்கள் குரல் கேட்டு கொண்டே என்று கூற, அதற்கு ஆஜித்தும் ஒரு விளக்கத்தை அளித்தார்.
ஆஜித்தின் குரல் இன்னும் பிக்பாஸ் வீட்டில் கேட்க வேண்டும் என்பதற்காக அவரை காப்பாற்றப்பட்டார் என்பதை மறைமுகமாக கமல் கூறிவிட்டார் என்பதையே இந்த வீடியோவில் இருந்து தெரிகிறது. இதனால் அனிதா இந்த வாரம் வெளியேறுகிறார். அவர் ஏற்கனவே வெளியேறிவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட செய்தியாக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#BiggBossTamil இல் இன்று.. #Day84 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/krHlfu8TwH
— Vijay Television (@vijaytelevision) December 27, 2020