பிக்பாஸ் அனிதா சம்பத் தந்தை காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிக்பாஸ் அனிதா சம்பத் தந்தை காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து கடைசியாக வெளியேறியவர் அனிதா. அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறினார்.
மேலும், வருகினற புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார், அதை நிகழ்ச்சியில் கூறினார்.
இதுவரை அனிதா நிகழ்ச்சி குறித்தோ, வீட்டிற்கு வந்தது குறித்தோ எதுவும் பதிவிடவில்லை. இந்த நேரத்தில் தான் அனிதாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராமில் எனது அன்புக்கு மிக்க தேவசேனா திரும்பி வந்துவிட்டாள் என ஸ்டோரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அனிதாவின் தந்தை பெங்களூருவில் மாரடடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அவரது தந்தை இறப்பு அவருக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலாக இந்த புதிய வருடப்பிறப்பை கொண்டாடுவதற்கு முடிவு செய்த நேரத்தில் இது போன்ற சோகமான முடிவு வந்துள்ளது.
அனிதா சம்பத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். தனது வாழ்க்கையை நியூஸ் ரீடர் மூலம் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.