#BigBoss4 ஷிவானி பற்றி பேசிய ஆரி, கை ஓங்கிய பாலா - பதற்றத்தில் ரசிகர்கள்!
#BigBoss4 ஷிவானி பற்றி பேசிய ஆரி, கை ஓங்கிய பாலா - பதற்றத்தில் ரசிகர்கள்!
By : Amritha J
இன்றைய ப்ரோமோவில் பாலாஜி ஆரியிடம் காதல் கண் கட்டுதே என்று கூறினீர்களே காதல் எனக்கு இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தீர்களா என்று கூற அப்போது ஆரி, "இவ்வளவு தைரியமானவனாக இருந்தா அன்றைக்கு ஷிவானி அம்மாவிடம் பேசி இருக்க வேண்டியதுதானே?" என்று கூறியபோது பாலாஜி வெளியே இருந்தங்களுக்கு நான் கொடுத்த மரியாதை அது என்று ஆவேசமாக பதில் கூறினார்.
அப்போது ஆரி, பாலாஜி ஆகிய இருவரையும் ரம்யா சமாதானப்படுத்திய போது ஆரி கூட்டிட்டு போங்க உங்க ப்ரெண்டை என்று கூறியபோது ரம்யா அதே கிண்டலுடன் "ஓகே ஓகே தேங்க் யூ தேங்க் யூ மை டியர் ப்ரண்ட்" என்று கூறியது எப்படி இருந்தது என்பதை பார்வையாளர்களின் மனநிலைக்கே விட்டுவிடுவோம்.
இந்த நிலையில் ஆரி மீண்டும் நானா ஷிவானி டாப்பிக்கை எடுத்தேன், யார் ஷிவானி டாப்பிக்கை எடுத்தது என்று கேட்க உடனே பாலா உச்சகட்ட ஆவேசமாக ஷிவானி டாப்பிக்கை விடுய்யா ஷிவானி டாப்பிக்கை விடுய்யா என்று தலையணையை எடுத்து ஆரி மேல் அடிக்க போவது போல் தரையில் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜியின் இந்த ஆவேசம் குறித்து கமல்ஹாசன் இன்று கேள்வி கேட்பாரா என்பதை பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/x8i1v5qCmn
— Vijay Television (@vijaytelevision) January 2, 2021