பிக்பாஸ்: போட்டியாளர்களால் திடீரென கோபமடைந்த கேப்டன் ரமேஷ்.!
பிக்பாஸ்: போட்டியாளர்களால் திடீரென கோபமடைந்த கேப்டன் ரமேஷ்.!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை நெருங்கி வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் யார், மோசமாக விளையாடியவர்கள் யார் என்று வரிசைப் படுத்தும் படி பிக்பாஸ் கூறியிருந்தார். இந்தநிலையில் போட்டியாளர்கள் அனைவரும் முதல் 6 இடங்களைப் பிடிக்க அவர்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் டாஸ்க்கில் ஒருத்தரை நாமினேஷனில் இருந்து சேவ் பண்ண வேண்டும் என்பதற்காக சேவ் பண்ணியவர்கள் டாப் சிக்ஸில் வரக்கூடாது என்று பாலாஜி தனது கருத்தை முன்வைக்கின்றார்.
பாலாஜி அவரது கருத்தை தெரிவிக்கும் போது கேப்டன் ரமேஷ் பொங்கி எழுகிறார். நீ அந்த டாப் சிக்ஸில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா என்றும் நீ பாட்டுக்கு ஆரியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுவிட்டு அவரை பதில் கூட சொல்ல விடாமல் போய்விட்டாய்.
அவர் இரவு தூங்கினாரா என்பது கூட உனக்கு தெரியாது என்று ஆரிக்காக ரமேஷ் பொங்கியது அதிலும் அர்ச்சனா குரூப்பில் உள்ள அவர் தனது குரூப்பில் இல்லாத ஒருவருக்கு பொங்கியது ஆச்சரியத்தை அளித்தது.
கேப்டன் டாஸ்க்கில் அதிருப்தியை தெரிவித்தது, ரமேஷ் அப்பாவை தேவையில்லாமல் இழுத்தது ஆகியவை காரணமாக பாலாஜி மீது ரமேஷ் கோபமாக இருப்பதே இவ்வாறு பொங்கியதற்கு காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியை பார்ப்போம்.