இரண்டாவது மனைவி குறித்து பேசிய பிக்பாஸ் பிரபலம்.!
இரண்டாவது மனைவி குறித்து பேசிய பிக்பாஸ் பிரபலம்.!
By : Amritha J
பிக்பாஸ் சீசன்-3 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சரவணன். நிகழ்ச்சியின் 46வது நாளில் திடீரென வெளியேற்றப்பட்ட அவர் எதற்கு வெளியேற்றப்பட்டார் என்ற காரணம் தெரியாமலே மக்களும், போட்டியாளர்களும் இன்று வரை குழம்பி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் போட்டியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதால்தான் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் அதுவாக இருக்காது என்றே அனைவரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் youtube-ல் பேட்டி அளித்த சரவணன் இது குறித்து கூறிய போது நான் ஏன் வெளியேற்றப்பட்டேன் என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. அதனால் இது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார். மேலும் அவர் குடும்பத்தைப் பற்றியும் அவர் முதல் மனைவியை பற்றியும் அவர் எவ்வாறு அன்போடு நடந்து கொள்வார் என நிகழ்ச்சியில் கூறினார்.
ஆனால் இதுவரை யாருக்கும் தெரியாத உண்மையா இரண்டாவது மனைவி பற்றி கூறியிருப்பது: ஒருநாள் நான் என் இரண்டாவது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவர் கர்ப்பமாக இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒருவர் உங்கள் மகள் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டார். அவரது கேள்வி எனது மனைவிக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு என் மனைவி என்னுடன் வெளியே வரவே இல்லை. அப்போது யோசித்தது நான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டேன் என்பதை எல்லோரிடமும் தெரிவிப்பேன்.
அதன் பிறகு உன்னை நான் வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று கூறினாராம். அதற்காக அவர் பகடைக்காய் பயன்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று சொன்னார்.மேலும் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதையும், எனக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஒரு குழந்தை இருப்பதையும் நான் பகிரங்கமாக தெரிவித்தேன் என்றார்.
பேட்டியின் முடிவில் அவர் கடைசியாக தெரிவித்தது இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் வர மாட்டேன் என்று கூறுகிறார்.