ஹீரோ அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் போட்டியாளரான நடன இயக்குனர் - யார் தெரியுமா.?
ஹீரோ அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் போட்டியாளரான நடன இயக்குனர் - யார் தெரியுமா.?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி.தற்போது நடன இயக்குனரான இவர் ஹீரோ அவதாரம் எடுக்கும் நிலையில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சந்துரு என்பவர் இயக்கும் "த்ரில் மர்டர்" கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார்.
அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் சாண்டியுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே படத்தின் கதை:கொலை மர்மமான முறையில் நடப்பதும் அந்தக் கொலையின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து சாண்டி கண்டுபிடிப்பது தான் கதை என்று கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பதாகவும் தெரிகிறது.
இந்த படத்தை சந்துருவின் சகோதரி தயாரிக்கும் இந்த படத்தில் ரமா, மைம்கோபி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சதீஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறாராம்.மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நடிப்பது மக்களுக்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.