Kathir News
Begin typing your search above and press return to search.

#BiggBoss4 - இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

#BiggBoss4 - இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

#BiggBoss4 - இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
X

Amritha JBy : Amritha J

  |  9 Jan 2021 11:43 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் கடைசி நாமினேசனில் வீட்டில் இருந்த ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் அல்லது இருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் ஒருவர் மட்டுமே வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஏழு போட்டியாளர்களுக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஆரிக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்து முதலிடத்தில் இருப்பதாகவும், ஆரியை அடுத்து இரண்டாவது இடத்தில் பாலாஜி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

மேலும் வாக்குகளின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் ரியோ மற்றும் 4-வது இடத்தில் கேபி ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் வாக்கெடுப்பின்படி கடைசி இடத்தில் உள்ளவர் ஷிவானி என்ற தெரியவந்துள்ளதால் அவர் இந்த வாரம் எவிக்ட் செய்யப்படாத அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஷிவானியை அடுத்து ரம்யாவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சோம் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுகிறார். அவரை அடுத்து ஆரி, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய நால்வரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நால்வரில் டைட்டில் வின்னர் யார் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரியும் அதனடிப்படையில் அவர்களுக்கு ஓட்டுகளும் அதிகமாக விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News