பிக்பாஸ்: இந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் யார் தெரியுமா..?
பிக்பாஸ்: இந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் யார் தெரியுமா..?

தமிழ் பிக்பாஸ் சீசன்-4 ஆரம்பிக்கப்பட்டு பல பிரச்சினைகளும்,சண்டைகளும், வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் நேற்று போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் குறைந்த வாக்குகள் அளிக்கப்பட்டதால் வீட்டை விட்டு சுசித்ரா வெளியேறினார்.
அதனிடையே இன்று வந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தேர்வு செய்யும் முறை நடைபெறுமாறு ப்ரோமோ இருந்தது. முதல்நபராக ஆரி எழுந்தவுடன் சில போட்டியாளர்கள் ஒரு நிமிடத்திற்குள் பேசிவிட்டு வருமாறு கேட்டுக் கொண்டதற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி நான் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்று பிக்பாஸ் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் என்றும் கூறினார்.
அடுத்ததாக அனைத்து போட்டியாளர்களும் அவர்களது நாமினேஷன் பட்டியலுக்கான நபர்களை தேர்வு செய்து முடித்தவுடன் பிக் பாஸ் கூறியது: இந்த வாரம் எலிமினேஷன்க்கு தேர்வானவர்கள் சனம், ஆரி, அனிதா, சோம், நிஷா, பாலா, ரமேஷ் ஆகிய நபர்கள் தேர்வாகியுள்ளனர்.
இதை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள்,போட்டியாளர்கள் அனைவரும் ஆரியை மிகவும் கோபப்படுத்துகிறார்கள் எனவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.இதைப் பார்த்து நெட்டிசன்கள் பிக்பாஸ் சீசன்-4ல் ஆரி வெற்றி பெறுவார்கள் என்று பலரும் அவர்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.