போட்டியாளர்களை பதற வைத்த பிக்பாஸ்: பரபரப்பில் ஹவுஸ் மெட்ஸ்!
போட்டியாளர்களை பதற வைத்த பிக்பாஸ்: பரபரப்பில் ஹவுஸ் மெட்ஸ்!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பலவிதமான டாஸ்க்குகள் பிக்பாஸ் கொடுக்கிறார். அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்று வரும் பால் & கேட்ச் டாஸ்க்கில் நேற்று சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர். இந்த நிலையில் இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது.
இன்றைய டாஸ்க்கில் பிளாஸ்மா டிவியில் தெரியும் பெயர் உள்ளவர்கள் உடனடியாக ஓடிச் சென்று பந்தை பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து சோம், பாலா, அனிதா, ரியோ, ஆஜித் என மாறி மாறி பிளாஸ்மா டிவியில் பெயர்கள் வர அந்த பெயருக்குரியவர்கள் பந்தை பிடிக்க ஓடுகின்றனர் இதில் ரம்யா, ரியோ, சோம் உள்பட ஒருசிலர் சரியாக பந்தை பிடித்து விடுகிறார்கள். ஆனால் பாலா பந்தை பிடிக்க ஓடிய போது தவறி விழுந்து கோட்டை விடுகிறார்.
ஏற்கனவே நேற்று அவர் தான் நிறைய பந்துகளை பிடிக்கும் வாய்ப்புகளை கோட்டை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் இந்த டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ்களை பிக்பாஸ் ஓடவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது. பாலா ஆர்வத்துடன் இந்த டாஸ்க்கை வேகமாக விளையாடினாலும், இவரால் அதிக பந்துகளை பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/RqGgTX09J1
— Vijay Television (@vijaytelevision) December 23, 2020