பிக்பாஸ்: தாயாரின் அதிர்ச்சி கேள்வி - ஷாக்கான சிவானி!
பிக்பாஸ்: தாயாரின் அதிர்ச்சி கேள்வி - ஷாக்கான சிவானி!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக, கடந்த சீசனை போலவே இப்போதைய சீசனிலும் வருகை தர உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்னிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.
85 நாட்களாக பிரிந்திருந்த தனது தாயாரை பார்த்ததும் ஷிவானி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். இருவரும் சிறிது நேரம் சென்டிமென்டாக நடந்து கொள்கின்றனர். இதைப்பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன் பின் ஷிவானியை தனியே அழைத்து கண்டிக்கும் வகையில் அவருடைய தாயாரும் கேள்வி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்தாய் நீ இந்த வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளியில் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறாயா என்று கண்டிக்கும்போது ஷிவானி அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.
வெளியில் என்னதான் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போல் இருந்தது.இதை அறிந்த ஷிவானி இனிவரும் நாட்களில் எவ்வாறு இருக்கிறார் என்று பார்ப்போம். மேலும் கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை கேட்ட கேள்வி போல் கிட்டத்தட்ட ஷிவானியின் தாயார் இன்று கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day86 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/eZ6ZjRQtIz
— Vijay Television (@vijaytelevision) December 29, 2020