பிக்பாஸ்: ரியோக்கு குறும்படம் போடும் நெட்டிசன்கள்.!
பிக்பாஸ்: ரியோக்கு குறும்படம் போடும் நெட்டிசன்கள்.!
By : Amritha J
பிக்பாஸ் வீட்டில் 65 நாட்களுக்கு மேல் கடந்த நிலைகள் பல சுவாரஸ்யமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த புதிய மனிதா டாஸ்க்கில் குரூப்பிஸம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது மட்டுமின்றி அந்த குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு பொய்யர்கள் என்பதும் தெரிய வருகிறது.
ஆனால் இதெல்லாம் நெட்டிசன்களின் குறும்படத்தால்தால் வெளிச்சத்துக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே நிஷா மற்றும் ஆரி குறித்த குறும்படங்கள் இன்று நெட்டிசன்களால் வந்த நிலையில் சற்றுமுன் ரியோ எந்த அளவுக்கு தனது அணிக்கு துரோகம் செய்து அர்ச்சனா அணிக்கு தகுந்தவாறு விளையாடியது தெரிய வருகிறது
சற்றுமுன் வெளியான நெட்டிசன் ஒருவரின் குறும்படத்தில்: உங்களுக்கு தெரிந்தவர்கள் செய்தால் தப்பில்லை, தெரியாதவர்கள் செய்தால் தப்பு என்ற ஃபேவரிட்ஸம் உங்களிடம் இருப்பதாக ரியோவிடம் அனிதா கூறியபோது, அனிதாவை ரியோவும் கேப்ரில்லாவும் வீண்பழி சுமத்துவதாக கூறினர்.
ஆனால் சில நிமிடங்களிலேயே அர்ச்சனா, கேபி, நிஷா இருக்கும்போது ரியோ, எனக்கு தெரியும், கேபி சிரிச்சிட்டான்னு, இருந்தாலும் அவளை காப்பாத்த நான் முயற்சி செய்தேன், நீ உண்மையிலேயே சிரிச்ச என்று கூறுகிறார்.
நெட்டிசன்களின் இந்த குறும்படத்தால் ரியோவின் முகமூடி கிழிந்துள்ளது. கண்டிப்பாக கமல்ஹாசனோ, பிக்பாஸோ அர்ச்சனா குரூப்புக்கு குறும்படம் போட மாட்டார்கள் என்று தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அனிதா கூறியது உண்மைதான் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.