பிக்பாஸ் ப்ரோமோ.. ரியோவின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய அனிதா.!
பிக்பாஸ் ப்ரோமோ.. ரியோவின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய அனிதா.!

பிக்பாஸ் வீட்டில் 'புதிய மனிதா' என்ற டாஸ்க் நடைபெற்றதில் நேற்று மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட அனிதா சிறைக்குச் சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் வெளியான முதல் புரமோவில் சிறையில் இருக்கும் அனிதாவுக்கும் வெளியில் இருக்கும் ரியோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அனிதா ரியோவிடம் வாதிடும்போது, நிஷாவும் அர்ச்சனாவும் கேம் விளையாடும்போது அர்ச்சனா அழுததால், கேமே ஒரு லெவலில் டவுன் ஆகி விட்டது. அப்போது அது உங்களுக்கு போரிங் என தெரியவில்லையா என்று கூறினார்.
அப்போது அந்த ஐடியாவை கொடுத்ததே நீதான் என்று ரியோ கூறினார். நிஷா ஒரு விஷயம் செய்தால் உங்களுக்கு பிடிக்கலை நான் அதே விஷயம் செய்தால் சுவாரசியம் இல்லையா என்ற அனிதா கேட்க அதற்கு ரியோ பிடிக்கலை என்பதற்கு சுவாரஸ்யம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார்.
அதன்பின் அனிதா, கேப்டன்ஷிப் டாஸ்க்கில் ட்ரை பண்ண நிஷா பெஸ்ட் ஃபெர்மார்மர், கேப்டன்ஷிப் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நான் வொர்ஸ் பெர்மாரா என்ற கிடுக்கிப்பிடி கேள்வியை அனிதா கேட்டவுடன், உடனே கேப்டன்சியை வைத்து நான் சொல்லவில்லை என்று ரியோ சமாளித்தார்.
ஒரு வாரம் முழுவதும் மோசமான போட்டியாளர் என்றால் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்லணும், அப்படி இல்லை என்றால் நீங்கள் தப்பாக சொல்லி இருக்கிறீர்கள் என்று அனிதா ஆவேச கூறினார்.
அனிதாவின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ரியோ தனது வழக்கமாக நன்றி என்று கூறி எஸ்கேப் ஆக முயன்றார். ஆனால் அனிதா விடவில்லை. கரெக்ட் பாய்ண்ட் பேசும்போது போய்விடுவார் இதுதான் ரியோ என்று கூறியபோது தன்னுடைய தவறு வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை அறிந்த ரியோ, அனிதாவிடம் கோபப்படுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.