பிக்பாஸ் ப்ரோமோ: முதலிடத்தில் நிற்க போட்டிபோடும் அர்ச்சனா மற்றும் சனம்..!
பிக்பாஸ் ப்ரோமோ: முதலிடத்தில் நிற்க போட்டிபோடும் அர்ச்சனா மற்றும் சனம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வார கால்சென்டர் டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் என்பதை 1 முதல் 13 வரை தேர்ந்தெடுங்கள் என பிக்பாஸ் கூறியுள்ளதையடுத்து முதல் இடத்திற்கு மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. சனம், அர்ச்சனா, பாலாஜி, ஆரி உள்பட பலர் தாங்கள் தான் முதலிடத்தில் நிற்பேன் என்று போட்டி போடுகின்றனர்.
தான் முதல் இடத்தில் நிற்க எந்த விதத்தில் தகுதியானவர் என்ற தனது தரப்பு வாதத்தை வைத்த அர்ச்சனா நான் தான் முதல் இடத்தில் நிற்பேன் என்று கூற சனமும் எனக்குத்தான் முதலிடம் என்று கூறுகிறார் .இதனால் அர்ச்சனா, சனம் மற்றும் பாலாஜி இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.
இரண்டாவது புரமோவில்: முதலிடத்தில் சனம், இரண்டாவது இடத்தில் அனிதாவும், மூன்றாவது இடத்தில் பாலாஜியும், நான்காவது இடத்தில் ரம்யாவும், ஐந்தாவது இடத்தில் ரியோ, ஆறாவது இடத்தில் ஆஜித் ஆகியோர் உள்ளனர். ஆனால் அடுத்த சில காட்சிகளில் அவர்கள் இடம் மாறி நிற்பது போலவும் உள்ளது. அதே நேரத்தில் இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் கேபி, ஷிவானி மற்றும் நிஷா இருப்பது போலும் தெரிகிறது.
இருப்பினும் இந்த வரிசை உறுதியானது இல்லை என்பதும் வாக்குவாதங்கள் காரணமாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்ச்சியிலாவது ஒன்று முதல் 13 வரையிலான இடங்களில் யார் இருப்பார்கள் என்று தெரிய வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.