பிக்பாஸ் ப்ரோமோ: நிஷாவை பழிவாங்கும் அர்ச்சனா.!
பிக்பாஸ் ப்ரோமோ: நிஷாவை பழிவாங்கும் அர்ச்சனா.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்த பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் ஆத்திரத்தை கிளறும் வகையில் நிஷா கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனது தந்தை மரணம் குறித்து நிஷா கேட்ட கேள்வியால் உடைந்துபோன அர்ச்சனா அவரது ஆதங்கத்தை கொட்டினார் என்பதும் நிஷா மற்றும் ரியோ மீது அவர் செம கடுப்பில் இருக்கிறார் என்றும் தெரிந்தது.
இந்த நிலையில் நேற்று அர்ச்சனாவை நிஷா பாடாய் படுத்திய நிலையில் இன்று அவருக்கு நிஷாவை டார்ச்சர் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. நேற்று என்னை கேட்ட கேள்விக்கு நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என கேள்வி கேட்கும் அர்ச்சனா நீங்கள் வருத்தப்பட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை என்றும் முழுக்க முழுக்க நடிப்பு என்றும் கூறுகிறார்.
மேலும் கேம் என்று வந்துவிட்டால் நான் மிகவும் சீரியஸாக இருப்பேன் என்று நிஷாவை எச்சரித்த அர்ச்சனா உனக்கு என்னுடைய சோகமும் கோபமும் எப்படி தெரியுமோ, அந்த அளவுக்கு உன்னுடைய கோபமும் சோகமும் எனக்கு தெரியும் என்று கூறியதோடு, அப்ப தொங்கு என்று கூறுகிறார். அர்ச்சனா நிஷாவை வச்சு செய்வதை ரம்யா பாண்டியன் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார் என்பதுபோல் ப்ரோமோ முடிந்தது.