பிக்பாஸ் ப்ரோமோ: ஆரி, அனிதாவை டார்கெட் செய்யும் அர்ச்சனா குழுவினர்.!
பிக்பாஸ் ப்ரோமோ: ஆரி, அனிதாவை டார்கெட் செய்யும் அர்ச்சனா குழுவினர்.!
By : Amritha J
பிக்பாஸ் வீட்டில் இன்று 67-வது நாட்களை கடந்து கொண்டிருக்கும் வகையில் பல சுவாரசியமான நிகழ்வுகள் பிரச்சினைகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் அர்ச்சனா தலைமையிலான லவ்பெட் குரூப் தனித்திறமை உடன் விளையாடும் போட்டியாளர்களை வெளியேற்றி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் தனித்தன்மையுடன் விளையாடி வந்தனர். இவ்வாறு தனித்தன்மையுடன் விளையாடி வருபவர்களை டார்கெட் செய்து லவ் லவ்பெட் குரூப்பினர் நாமினேட் செய்து வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த வாரம் எதிர்பார்த்தபடி ஆரி மற்றும் அனிதா டார்கெட் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் மோசமாக செயல்பட்டவர்கள் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அடுத்த கேப்டனுக்கான பட்டியலிலும், சிறைக்கு செல்லும் பட்டியலிலும் தேர்வு செய்யப்படுவது வழக்கம் என்பதால் நிஷா அனிதாவிடம் பிரச்சினை செய்கிறார்.
அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில் இந்த வாரம் மோசமாக செயல்பட்டவர்கள் பட்டியல் குறித்த நாமினேஷன் நடக்கும்போது ஆரி மற்றும் அனிதாவை லவ் பெட் குரூப்பினர்கள் தேர்வு செய்துள்ளார்கள். ரியோ, ஜித்தன் ரமேஷ், ஆஜித், சோம், அர்ச்சனா ஆகியோர் ஆரி, அனிதாவை மோசமான போட்டியாளர்கள் என்று கூறுவதால் அவர்கள் இருவரும் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆஜித்தும் லவ்பெட் குரூப்பில் இணைந்துள்ளது இன்றைய ஆச்சரியம்.லவ்பெட் குரூப்புக்கு எதிராக ஆரி, அனிதா, பாலாஜி ஆகியோர் வரும் நாட்களில் எப்படி விளையாட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.