பிக்பாஸ் ப்ரோமோ: பாலாஜி குரூப்பில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டாரா?
பிக்பாஸ் ப்ரோமோ: பாலாஜி குரூப்பில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டாரா?
By : Amritha J
பிக்பாஸ் இன்று முதல் ப்ரோமோவில் யார் வெளியேற்றப்படுகிறார் என்ற காட்சிகள் அதில் இல்லை என்றாலும் குறைவான வாக்குகள் பெற்றும், சமூக வலைதளங்களிலும் அதிகமாக சம்யுக்தா வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் குறும்படம் உண்டு என்றும் முக்கியமாக சனம் மற்றும் சம்யுக்தாவின் இருவரும் பேசிய போன் உரையாடல் பற்றி, பின் சம்யுக்தா கூறியது, ஆரி தாய்மை குறித்து பேசியது என இரண்டும் வெளிப்படையாக இன்று அதற்கு தீர்வு காணும் வகையில் இருக்கும் என தெரியவருகிறது.
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் பாலா மற்றும் ஆரி ஆகிய மக்களால் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்ட நிலையில்,சனம், நிஷா, ரமேஷ், சோம், ஆகியோர்களும் சேவ் செய்யப்பட்டதாகவும் சம்யுக்தா எவிக்ட் செய்யப்பட்டதாகவும் கமலஹாசன் அறிவித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் முதலில் நாமினேஷன் செய்யப்பட்டதில் சம்யுக்தா இல்லை அதன் பிறகு இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த பர்ப்புள் கார்ட் அனிதாவுக்கு கிடைத்ததன் காரணமாக அவர் அனிதாவால் நாமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.