பிக்பாஸ் ப்ரோமோ: சனம்-ரியோ இருவருக்கும் நடுவே வாக்குவாதம் - உற்சாகத்தில் பாலாஜி.!
பிக்பாஸ் ப்ரோமோ: சனம்-ரியோ இருவருக்கும் நடுவே வாக்குவாதம் - உற்சாகத்தில் பாலாஜி.!
By : Amritha J
பிக்பாஸ் வீட்டில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் நேற்று தொடங்கிய கால்சென்டர் டாஸ்க் இன்னும் நடைபெற்றுவரும் நிலையில் சனம்-ரியோ இருவருக்கும் நடுவே மோதல் ஏற்படுவது போல ப்ரோமோ அமைந்துள்ளது. 52ஆவது நாட்களை கடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஃபேன் பேஜ்களும் உருவாக தொடங்கியுள்ளன. மேலும் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களை பற்றி மீம்ஸ்களையும் உருவாக்கி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
இதில் போட்டியாளர்கள் ரியோக்கும் சனம் ஷெட்டிக்கும் மோதல் வெடிப்பது போல காட்டப்படுகிறது. மேலும் டென்ஷனான ரியோ சனமை வார்த்தையை பார்த்து பேசுங்கள் என்று கூறினார்.இது ஒருபுறம் இருக்க, நடப்பதை பார்த்து பாலாவும் ஷிவானியும் சிரித்து கொண்டிருப்பது போலவும் காட்டப்படுகிறது. இவ்வாறே ப்ரோமோ முடிந்தது. இதை பார்த்து பல நெட்டிசன்களும், ரசிகர்களும் சனத்திற்கு ஆதரவாகவும் சிலர் பாலாஜி சிவானி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என கமெண்ட் களை பதிவிட்டு வருகின்றனர்.