#BigBoss4 #Promo மன்னிப்பு கேட்ட பாலாஜி - நடிப்பு என்று கூறும் பார்வையாளர்கள்!
#BigBoss4 #Promo மன்னிப்பு கேட்ட பாலாஜி - நடிப்பு என்று கூறும் பார்வையாளர்கள்!
By : Amritha J
இன்று வந்த முதல் புரோமோவில் இருப்பவை: பாலாஜி, கன்பெக்சன் அறையில் உட்கார்ந்து பேசியபோது, கோபம் என்பது என்னுடைய இயற்கை. கோபத்தை மட்டுமே நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அது தவறு, இது தவறு என்று சொல்வதற்கு என்னுடைய வாழ்க்கையில் யாருமே இல்லை. மக்களும் சரி, மக்களுடைய பிரதிநிதியான கமல் அவர்களும் சுட்டிக்காட்டும்போது தான், நான் செய்தது உச்சகட்டம் மிஸ்டேக் என்று எனக்கு புரிகிறது. அதை சரி செய்யவும் எனக்கு தெரியும். மேலும் நான் எவ்வளவுதான் கீழே விழுந்தாலும் மீண்டும் எழுவது தான் என்னுடைய இயற்கை. எவ்வளவு கீழே விழுந்தாலும் மறுபடியும் நான் உச்சத்திற்கு வருவேன் என பாலாஜி கூறினார்.
இதனை அடுத்து கமலஹாசன் அவரை பாராட்டுவதுடன் இன்றைய புரமோ முடிவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் இந்த தருணத்திலாவது பாலாஜி தன்னுடைய தவறை உண்மையிலேயே உணர்ந்து மன்னிப்பு கேட்டாரா இல்லை மீதமுள்ள இரண்டு வாரங்களில் மீண்டும் முருங்கை மரம் ஏறுவாரா என்று நெட்டிசன்கள் பார்த்து வருகின்றனர். அவருடைய மன்னிப்பு உண்மையானதுதானா என்பதை இனி வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/QFaAQ72jCq
— Vijay Television (@vijaytelevision) January 3, 2021