பிக்பாஸ் ப்ரோமோ: குருபீஸம் இருக்கு என்பதை நிரூபிக்கும் போட்டியாளர்கள்.!
பிக்பாஸ் ப்ரோமோ: குருபீஸம் இருக்கு என்பதை நிரூபிக்கும் போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் வீட்டில் இரண்டு நாட்கள் தாண்டி மூன்றாவது நாளாக கால் சென்டர் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினால் ஏராளமான பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் நடைபெற்று தான் வருகின்றன. இந்த டாஸ்க்கை பயன்படுத்தி அர்ச்சனாவின் குரூப்பில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஏதுவான நபர்களை தேர்ந்தெடுத்து பேசி அவர்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் தெர்வாகத வகையில் விளையாடி வருகின்றனர்.
ஆனால் இவ்வாறு செய்வதை அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என்ற என நம்ப வைக்க அந்த குரூப்பில் உள்ளவர்கள் போராடி வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் மீண்டும் குரூப்பில் உள்ளவர்கள் நாங்கள் குரூப் தான் என்பதை நிரூபிக்கின்றனர்.
மேலும் இன்றைய ப்ரோமோவில் நேற்று சனம், அனிதா மற்றும் ரியோ வாக்குவாதம் நடந்த நிலையில் இன்று அந்த வாக்குவாதம் குறித்து விளக்கம் அளிக்கிறார் சனம். அர்ச்சனாவின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் ரியோவிடம், சனம் அவரது கருத்தை தெளிவுபடுத்துகிறார்.அப்போது சனம் கூறுவது:இதற்கு முன்னாடி நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து குட் மார்னிங் என்றாவது சொல்லிக்கொண்டு இருந்தோம் என்று ஆரம்பித்த போது ரியோ நான் எவ்வளவோ உனக்கு விளக்கம் அளித்து விட்டேன், இதற்கு மேல் என்னால் விளக்கம் அளிக்க முடியாது,
நான் ரொம்ப டயர்டா ஆகி விட்டேன் என்று சனம்ஷெட்டிக்கு விளக்கம் அளிக்கிறார்.இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா ரியோவுக்கு ஆதரவாக பேசுகிறார்.நிஷா மூவரும் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார். இவ்வாறே ப்ரமோ முடிந்தது.