பிக்பாஸ் ப்ரோமோ: நிஷாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் ஏன் தெரியுமா..?
பிக்பாஸ் ப்ரோமோ: நிஷாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் ஏன் தெரியுமா..?
By : Amritha J
பிக்பாஸில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் தேர்வு நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் அனிதா, சோம்,பாலா, ரமேஷ், சனம், நிஷா, ஆரி ஆகிய போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நாமினேட் செய்யப்பட்ட 7 பேருக்கும் ஒரு நாமினேக்ஷன் டாப்பர் கார்டு கொடுத்து போட்டியாளர்களை அடித்துக்கொள்ள வைத்துவிட்டார் பிக்பாஸ்.
டாப்பர் கார்டு வாங்கி நாமினேஷனில் தப்பிக்க யார் தகுதியானவர்கள் என்று தாங்களே பேசி ஜெயிப்பது போல ப்ரோமோ இருந்தது. மேலும் நிஷா பிக்பாஸ் வந்ததிலிருந்து கூறுவதே ரியோ வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமே அவர் வைத்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் எதுக்கு நீங்க இங்க வந்தீங்க என்று ஆவேசமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் நிஷா வெளியேறுவார் என்று பலரும் அவரது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அதனுடைய இரண்டாவது ப்ரோமோவில் கடைசியாக பிக்பாஸ் நீங்கள் உங்களுக்கு பதிலாக வீட்டில் நாமினேட் ஆகாத நபர்களில் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கும்போது அதற்கு பாலா அர்ச்சனா என்றும் நிஷா ஆஜித்தை கூறுவது போலவும், அதைப் பார்த்து ஆஜித் மிகவும் அதிர்ச்சியாக இருப்பது போல புரோமோ முடிந்தது.இதுபற்றிய முழுமையான தகவலும் இன்றைய நிகழ்ச்சிகள் பார்த்தால்தான் தெரிய வரும்.