பிக்பாஸ் ப்ரோமோ: போட்டியாளர்களிடம் ரம்யாவை சிக்க வைக்க கமல் கேட்ட கேள்வி.!
பிக்பாஸ் ப்ரோமோ: போட்டியாளர்களிடம் ரம்யாவை சிக்க வைக்க கமல் கேட்ட கேள்வி.!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் அமைதியாக ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் அடுத்தவர்களை குறைக் கூறுவதையும், எதை சொன்னாலும் சிரித்துக்கொண்டே சொல்வதுபோலயும் வழக்கமாக வைத்திருப்பவர் ரம்யா பாண்டியன்.
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் அமைதியாக இருந்த ஷிவானியை கூட பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று ரம்யா வாயை திறக்கவே இல்லை என்பதும் அவர் நேற்றைய எபிசோடில் ஒரு வார்த்தை கூட பேச வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ரம்யாவை கமல் அதிக நேரம் பேச வைத்துள்ளார்.
இன்றைய ப்ரோமோவில் கமல் ரம்யாவிடம் கேட்டது:கால் சென்டர் டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷிடம் கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கினீர்கள், ஜித்தன் ரமேஷ் வெகு நேரம் தாக்கு பிடித்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.
அதன்பின்னர் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கின்றதா என கமல் கேட்க ரம்யா பாண்டியன் சொன்ன பதில் அர்ச்சனா எல்லோரையும் சகஜமாக மனவருத்தம் செய்துவிடுவார்கள், ஒரு சில நேரத்தில் பாலாவுக்கு காதல் கண்ணை மறைக்குதோ என்று சந்தேகம் இருப்பதாக கூறினார். மேலும் கேபியை பற்றிக் கூறும்போது அவர் கொஞ்சம் அமைதியாக யோசித்தபோது கமல், இப்பொழுது புரிகிறதா கேள்வி கேட்பது ரொம்ப ஈசி, பதில் சொல்வது எவ்வளவு கஷ்டம் என்று ரம்யாவிடம் கமல் கூறினார் என்பது போல புரமோ முடிந்தது. இதை பார்த்த அனைவரும் இன்றைய நிகழ்ச்சியை மிக சுவாரசியமாக இருக்கும் என்றும் குறும்படம் இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.